ராகுல் காந்தி வந்தால் கார்கே ஒத்துகொள்ளவர்- திருநாவுக்கரசர்

ராகுல் காந்தி வந்தால் கார்கே ஒத்துகொள்ளவர்- திருநாவுக்கரசர்

எம்.பி திருநாவுக்கரசர் 

எம்பிகள் கூடிதான் யார் பிரதமர் என்று தேர்ந்தெடுப்போம், ராகுல் காந்தி வந்தால் கார்கே ஒத்துக்கொள்வார். கார்கே வந்தால் ராகுல்காந்தி ஒத்துக்கொள்வார். என்னுடைய முதல் சாய்ஸ் ராகுல் காந்தி தான் - எம்.பி திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே உள்ள கூட்ட அரங்கில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்: எண்ணூர் ஆலையில் வாய்வு கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் இனிமேல் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் என்னென்ன உயர் தொழில்நுட்பம் இருக்கிறதோ அதனை பயன்படுத்தி அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரது ஆட்சிக் காலத்தில் இயற்கை பேரிடர்கள் நடந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகளுக்கு திட்டம் தீட்டி ஒரே ஆண்டில் செய்ய முடியாது, ஐந்து ஆண்டுகள் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கி மக்கள் பாதிப்புக்குள்ளாகமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசின் நிதியை வைத்து மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றிய அரசு போதிய நிதி வழங்க வேண்டும். தேசிய பேரிடர் என்று அறிவித்தால் மற்ற மாநிலங்கள் கூட உதவி செய்ய முன் வருவார்கள் உதவியும் செய்யலாம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கும் வரி விளக்கு கிடைக்கும். தேசிய பேரிடர் என்று அறிவிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை, சுனாமியை தேசிய பேரிடராக அறிவித்தார்கள் அதேபோல் அரசு நினைத்தால் இதனையும் தேசிய பேரிடராக ஒன்றிய அரசு நினைத்தால் அறிவிக்கலாம். ஏட்டிக்கு போட்டி இல்லாமல் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை சார்ந்தவர். வேற மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பார்க்க வருவது பாராட்டு கூறியது. அவர் பார்வையிட்டுவிட்டு ஆளுநராக தான் பதில் கூற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக பதில் கூறக்கூடாது. பாஜக காரரை போல் தமிழிசை சௌந்தர்ராஜன் செயல்பட கூடாது. விமர்சனம் செய்ய பாஜகவில் அண்ணாமலை போன்ற பல மலைகள் உள்ளன. இவர் வந்து தான் கூடுதலாக திமுகவை திட்ட வேண்டுமா? பொன்முடி போல் சொத்து குவிப்பு வழக்கில் பலர் தண்டனை பெற்றுள்ளனர். பொன்முடி தான் முதலில் சிறை போறாரா? முதலமைச்சர்கள் அமைச்சர்கள் சிறை போய் இருக்கிறார்கள், அரசியல்வாதிகள் மட்டும் இல்லை அதிகாரிகள் யாராக இருந்தாலும் இடி சிபிஐ ஐடி போன்றவற்றின் சோதனைகள் உள்நோக்கத்துடனும் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது.

கட்சியை அழிக்கும் நோக்கிலோ அதன் புகழை கெடுக்கும் வகையிலும் இருக்க கூடாது. அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இருக்க கூடாது. எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறும் போதும் பாஜகவினரை பார்த்து உங்களுக்கு கோபம் வரவில்லையா அவர்களுடன் கூட்டணி இல்லை என்று ஏன் அறிவிக்கவில்லை என்று பாஜகவினரை தான் கேட்க வேண்டும், பாஜகவை விட்டு அதிமுக வெளியே வந்துள்ளதால் பாஜகவை மட்டும் முழுமையாக திட்டினால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தால் தற்போது காங்கிரஸையும் பேச வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கட்சிகளால் எந்த பலனும் இல்லை என்று கூறுகிறார்.

இன்னும் போக போக அவர் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்வார். கூட்டணியில் 26 தலைவர்கள் கலந்துகொண்டார்கள். எம்பிகள் கூடிதான் யார் பிரதமர் என்று தேர்ந்தெடுப்போம் ராகுல் காந்தி வந்தால் கார்கே ஒத்துகொள்ளவர். கார்கே வந்தால் ராகுல்காந்தி ஒத்துக்ககொள்ளவர் என்னுடைய முதல் சாய்ஸ் ராகுல் காந்தி தான் . வேங்கைவயல் சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது CBI க்கு போகவேண்டிய வழக்கா என அரசு முடிவு செய்யும் ராமர்கோவில் கும்பிடுபவர்கள் போய் கும்பிடட்டும் முடியாதவர்கள் இங்கே இருந்து கும்பிடுவோம்.நான் அனைத்து கடவுளையும் கும்பிடுபவன் கோயில் கட்டியாச்சு புடித்தவர்கள் அனைவரும் கும்பிடலாம் ராமரை கும்பிட கூடாது என்று இல்லை புடித்தவர்கள் கும்பிடலாம். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன மக்களுக்கு கஷ்டமான நேரத்தில் உதவி செய்ய வந்தார்களா இல்லை குறை கூற வந்தார்களா? நிவரணபணி முடிந்த பின் பொறுமையாக அவர் வந்து கணக்கு கேட்கட்டும். அமைச்சர் உதயநிதி ஒரு காட்சியில் பொறுப்பில் இருக்கிறார் அவருக்கு இதை தான் பேச வேண்டும் என்று யாரும் சட்டம் போடகூடாது . அதற்கு பிஜேபி பதில் கூறி விட்டார்கள் யாரும் யாருக்கும் பள்ளிக்கூடம் நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

Tags

Next Story