விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க ஐஜி ஆலோசனை

விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க  ஐஜி ஆலோசனை

ஐஜி ஆய்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் மற்றும் அந்தனூர் அருகே கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட இரு சாலை விபத்துக்களில் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று (24.10.2023) வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர். எம்.எஸ். முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன்,இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திருவண்ணாமலை நகரம் முதல் செங்கம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட எல்லைவரை உள்ள சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் (NHAI) மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகர்களும் (TNSTC) இருந்தனர். அவர்களிடம் சாலை விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story