பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்ட ஐ.ஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்.

பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்ட ஐ.ஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்.

ஐ.ஜி.பிரமோத்குமார்

பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்ட ஐ.ஜி பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டனர்.இந்த மோசடி வழக்கில் கமலவள்ளி,மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி உள்ளிட்ட சிலரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.அப்போதைய மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமார், டிஎஸ்பி ராஜேந்திரன்,இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் இடைதரகர்கள் பிரபாகரன், செந்தில் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து இருந்தது.இந்த வழக்கு கோவை மாவட்ட இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரமோத்குமார் ஐபிஎஸ் மற்றும் ஐந்து பேருக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு 25ம் தேதி கோவை இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஐ.ஜி.பிரமோத்குமார் ஆஜராகவில்லை மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர். இதனையடுத்து ஐ.ஜி பிரமோத்குமாருக்கு எதிராக ஜாமினில் வெளிவர மமுடியாத கைதுவாரண்டை சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் பிறப்பித்தார்.இந்நிலையில் இன்று ஐஜி பிரமோத்குமார் வழக்கு விசாரணைக்காக கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.விசாரணையானது துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story