ஐ ஐ டி மாநாடு: இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்பு
இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-வது மாநாட்டில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார்.
சென்னை ஐஐடி சார்பில், இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9-வது மாநாடு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் திரிபுரா மாநில ஆளுநர் இந்திரா சேனா, இசையமைப்பாளர் இளையராஜா, ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல் மே 26 ஆம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள், 70 கலைகளைச் சார்ந்த கலைஞர்கள் வல்லுனர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பங்கேற்போர் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், நெறிமுறைகள் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், சிறந்த கலைஞர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பாக அமையும். இதில் பங்கேற்போருக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ - மாணவிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் மாநாட்டை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். 40-க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
Next Story