சட்ட விரோத மது விற்பனை
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் கள்ளச் சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 228 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். சோதனையில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 228 மது பாட்டில்கள், 90 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1200 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றும். இது தொடர்பாக 18மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Next Story