நெமிலியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதல் பரபரப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைதூக்கி உள்ளதாகவும் மேலும் லஞ்சம் வாங்கும் வட்டார வளர்ச்சி அலுவலரை உடனடியாக மாற்றக்கோரி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து திட்டங்களிலும் 5% லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நெமிலி ஒன்றிய குழு துணைத் தலைவர் தீன தயாளன் தலைமையில் நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்று கூடி நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைதி அமைதியை சீர்குளிக்கும் வகையிலும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும்,
அரசின் அடிப்படை திட்டங்களுக்கு லஞ்சம் பெறும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை உடனடியாக மாவட்ட நிர்வாகம் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இவர்களை இடம் மாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்தினால் விரைவில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பூட்டு போடுவோம் எனும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..