தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய வெப்பம்!

இந்த ஆண்டு முதல்முறையாக 4 இடங்களில் சதம் அடித்த வெயில்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாட்டில் 4 இடத்தில் வெயில் சதம் அடித்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக 102.92°F வெப்பமும், கரூர் பரமத்தியில் 102.20°F, மதுரை விமான நிலையத்தில் 100.94°F, நாமக்கலில் 100.40°F வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் அதிகரித்து வருவதின் காரணமாக 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகும் இடங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story