தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது
வெயில்
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 20 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 16ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் இன்று முதல் 18 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் தமிழகத்தில் இன்று இயல்பை விட 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104.36 ° F வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் 102.74°F, சேலத்தில் 102.2°F, கரூர் பரமாத்தியில் 102.2°F, மதுரையில் 101.84°F,வேலூரில் 101.48°F,திருச்சியில் 100.94°F,நாமக்கல்லில் 100.4°F,தருமபுரியில் 100.4°F, திருப்பத்தூரில் 100.04°F வெப்பமும் பதிவாகியுள்ளது.
Next Story