வணிக வரித்துறை அலுவலகம் திறப்பு விழா

வணிக வரித்துறை அலுவலகம் திறப்பு விழா

அலுவலக திறப்பு விழா

தூத்துக்குடியில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தினை காணொளிக்காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வணிகவரித்துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து (17.02.2024) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் உதவி வணிகவரி அலுவலகம் 1 & 2ல் வணிகவரி அலுவலர் அறை, துணை வணிகவரி அலுவலர் அறை உதவி வணிகவரி அலுவலர் அறை அலுவலக அறை, உணவு அருந்தும் அறை, கணினி அறை ஆவண காப்பக அறை பதிவு வைப்பறை, ஓட்டுநர் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் உதவி வணிகவரி அலுவலகம் (Enforcement) மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் அறை, வணிகவரி அலுவலர் (குரூப்-2) அறை, உதவி வணிகவரி அலுவலகம் (Enforcement) அறை துணை வணி அலுவலர் (குரூப்-1) அறை, வணிகவரி அலுவலர் (யுரனவை) அறை, உதவி வணிகவரி அலுவலர் அறை, புள்ளியியல் ஆய்வாளர் அறை மேலாளர் அறை அலுவலர் அறை எழுதுபொருள் அறை உணவு அருந்தும் அறை, கனிணி அறை, ஆவண காப்பக அறை பதிவு வைப்பறை ஆவர்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தனத்தில் துணை ஆணையர் அலுவலகத்தில் வணிக வரி அலுவலர் (குரூப்-1) (Squard) gear also apost (குரூப்-2) அறை துணை வணிகவரி அலுவலர் அறை, ஆவண காப்பக அறை, பதிவு வைப்பறை Pantry, 100 நபர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை, மாற்று திறனாளிகள் கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் துணை ஆணையர் அலுவலகம் உதவி ஆணையர் I அலுவலகம், உதவி ஆணையர் II அலுவலகம், உதவி ஆணையர் III அலுவலகம் மற்றும் உதவி இயக்குநர் செயலாக்க அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் அமைத்து இயங்கும் வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story