தொடர் மழை : ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தொடர் மழை : ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
 பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் 
சேர்வைக்காரன் பட்டி, வேலாணூரணி, உலக தேவன் பட்டி, அம்மன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்திருந்த வெங்காயம், மிளகாய், சோளம், குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியம் வேலானூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம், உளுந்து, மல்லி, பாசிப்பயறு, சோளம், பருத்தி, கம்பு, மிளகாய் உள்ளிட்ட வணிகப் பயிர்களை பயிரிட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் தங்கள் நகைகளை அடகு வைத்தும், வெளியில் வட்டிக்கு கடன் வாங்கியும் ஒரு ஏக்கருக்கு சுமார் 50ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது பெய்த கனமழையால் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் வெங்காயம், உளுந்து, மல்லி, சோளம், பருத்தி, கம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக அப்பகுதி வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் தற்போது வட்டி கட்டி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். ஆகையால், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேலானூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சேதமடைந்துள்ள பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story