சேலம் துணை மேயர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை

சேலம் துணை மேயர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை

துணை மேயர் சாரதா தேவி

சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி துணை மேயராக இருப்பவர் சாரதா தேவி. இவரது வீடு கன்னங்குறிச்சி பிரதான சாலை நித்யாநகரில் 2-வது தெருவில் உள்ளது. இவர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணைத்தலைவராகவும் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி இவரது வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.

அதன்பேரில் வருமான வரித்துறையினர் துணை மேயர் சாரதா தேவி வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பணமோ, பொருட்களோ கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையின் போது சாரதாதேவி மயிலாடுதுறையில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ளார். அவரது மகன் மற்றும் மருமகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். துணை மேயர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை அறிந்த காங்கிரசார் அவரது வீட்டில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story