சுங்க கட்டணம் உயர்வு

சுங்க கட்டணம் உயர்வு

சென்னை புறநகரில் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


சென்னை புறநகரில் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசின் கீழ் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.. பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 45 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது... உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 60 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டு இருந்தது.

Tags

Next Story