வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு
மீன் விலை உயர்வு
தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகள் மீன்பிடிக்க 60 நாட்கள் தடைக்காலம் மீன்வளத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருவைக்குளம் கடல் பகுதியில் இருந்து செல்லும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றன. இந்த படகுகளில் அதிக அளவு முரல் மீன்கள் மற்றும் விளைமீன் , நகரை , ஐலேஷ், சூரை, கிளாத்தி ,திருக்கை , மயில் மீன், உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு இந்த மீன்கள் தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் ஏல கூடத்தில் விற்பனை செய்யப்பட்டன .
மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால் வழக்கத்தை விட மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்து காணப்பட்டது. முரல் மீன்கள் கிலோ 200 முதல் 400 ரூபாய் வரை விற்பனையானது ஷீலா மீன்கள் 600 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது இதேபோன்று நகரை கிலோ 600 ரூபாய் வரையும் விளை மீன் கிலோ 500 ரூபாய் வரையும் ஊலி கிலோ 500 ரூபாய் வரையும் ஐலேஷ் கிலோ 250 ரூபாய் வரையும் சூறை மீன்கள் ஒரு கிலோ 250 ரூபாய் வரையும் விற்பனையானது.
இங்கு பிடித்து வரப்படும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் எடுத்துச் செல்கின்றனர். மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்