மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,138 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 48.36 அடியில் இருந்து இன்று 48.86 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 17.10 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4,114 கன அடியிலிருந்து 4,138 கன அடியாக அதிகரித்துள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story