மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 116 கன அடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் சரிவை சந்தித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 86 கன அடியில் இருந்து இன்று 116 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.42 அடியில் இருந்து 68.85 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 31.72 டிஎம்சியாக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags
Next Story