மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 கன அடியிலிருந்து 79 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 22 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 79 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.00 அடியாகவும், நீர் இருப்பு 21.10 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story