மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,489 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,489 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதும் குறைவதுமாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4,072 கன அடியாக இருந்த நிலையில் இன்று 4,489 சுனஅடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 65.04 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று 65.48 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.93 டி.எம்.சி,யாக உள்ளது.
Tags
Next Story