சேலம் மார்க்கெட்டுக்கு ஆரஞ்சு பழம் வரத்து அதிகரிப்பு

X
சேலம் மார்க்கெட்டுக்கு ஆரஞ்சு பழம் வரத்து அதிகரிப்பு
அரைக்கிலோ ஆரஞ்ச் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரஞ்சு பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் தமிழகத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி சேலம் மார்க்கெட்டிற்கு ஆரஞ்சு பழம் வரத்து அதிகரித்துள்ளதால் இங்கிருந்து சில்லறை வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் அதிக அளவில் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக அயோத்தியபட்டணம், ஏற்காடு சாலை, அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி பைபாஸ், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் டன் கணக்கில் ஆரஞ்சு பழங்களை வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர், ஒரு கிலோ ஆரஞ்சு பழம் ரூ.70 க்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த மாதம் கிலோ ₹.120 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூபாய் 70க்கு விற்பனை செய்கிறோம். அதேபோல் இரண்டாம் தர ஆரஞ்சு பழம் இரண்டரை கிலோ ரூபாய் 100-க்கும் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.
Tags
Next Story
