இந்தியா கூட்டணி கேள்விக்குறி?: பிரேமலதா

இந்தியா கூட்டணி கேள்விக்குறி?: பிரேமலதா

செய்தியாளர்களை சந்திக்கும் பிரேமலதா


தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி வந்தார். இதைத்தொடர்ந்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தே.மு.தி.க. தற்பொழுது யாருடனும் கூட்டணியில் இல்லை. நட்பு ரீதியாக அனைவரும் எங்களுடன் பேசி வருகிறார்கள். ஆனால் யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார். அதுவே இறுதியான அறிவிப்பாகும்

இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதை கேள்விக்குறியாக உள்ளது. அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதலமைச்சர்களும் அடுத்த பிரதமரும் நான்தான் என்கிறார்கள். ஒருவர் தான் பிரதமராக வர முடியும். அவர்கள் கூட்டணியில் முரண்பாடு உள்ளது. அந்த கூட்டணி இறுதிவரை செல்லுமா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். கலைஞர் உரிமை தொகை திட்டம் வழங்குவது வெற்றி பெறவில்லை.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமை இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படும். மருத்துவமும், கல்வியும் இலவசமாக வழங்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது இதெல்லாம் கண்துடைப்பாகும். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. இதனால் யாரும் ஆதாயம் அடையப்போவதில்லை. தொலைநோக்கு பார்வையோடு சரியான திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும். அதுதான் மக்கள் வரவேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story