மோடியால் உலக அளவில் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா ஐந்தாவது இடம்

மோடியால் உலக அளவில் பொருளாதார முன்னேற்றத்தில்  இந்தியா ஐந்தாவது இடம்

சபத யாத்திரை நிகழ்ச்சி,

மோடியால் பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடம் -ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால்
மயிலாடுதுறை அருகே "நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்" சபத யாத்திரை நிகழ்ச்சி, நடைபெற்றது. இதில் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, அமைச்சர், சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டார். பிரச்சார வாகனம், மற்றும் அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் நலதிட்டஉதவிகளை வழங்கி உரையாற்றும்போது, "தமிழ்நாடு என்பது பாரம்பரியம், பாதுகாப்பு, கலாச்சாரமிக்க, சோழர்கள் வாழ்ந்த நாடு இதில் அப்துல் கலாம், திருவள்ளுவர், ராமானுஜம், எம்ஜிஆர், கமலஹாசன், சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடு தான் தமிழ்நாடு. பிரதமர் மோடியின் தலைமைப் பண்பிலான பல்வேறு திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இன்று உலக அளவில் இந்தியா ஐந்தாவது நாடாகபொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு திட்டத்தின் கீழ், பயனடைந்த, பல்வேறு மாநில அளவில் உள்ள பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் பல்வேறு வங்கி மேலாளர்கள், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் அகோரம்,கோவி சேதுராமன் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story