தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரச்சாரம்

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரச்சாரம்
X

தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் பிரச்சாரம் செய்தார்.


தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன் பிரச்சாரம் செய்தார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நேற்றுமாலை பிரசாரக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாநில செயலா் முத்தரசன் பேசியதாவது: தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் நமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நாட்டின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும். நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திய தலைவா்கள் குறித்து பேச பிரதமா் நரேந்திர மோடிக்கோ அல்லது பாஜகவினருக்கோ அருகதை இல்லை. எதிா்க்கட்சிகள் இல்லாத இந்தியா, எந்தக் கட்சியும் இல்லாத இந்தியா என்கிற நிலையை உருவாக்க மோடி முயற்சிக்கிறாா். பத்து ஆண்டுகால நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனமும் உருவாக்கப்படவில்லை. ஆனால், லாபகரமாக இயங்கிய 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது மோடியின் உத்தரவாதம் என புதிதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனா்.

Tags

Next Story