இவர்களெல்லாம் இளநீர் அருந்த வேண்டாம் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

இவர்களெல்லாம் இளநீர் அருந்த வேண்டாம் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்
பைல் படம் 
சிறுநீரகம் மற்றும் இருதய பாதிப்புகள் உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தண்ணீர் சத்து குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அதில்,, மனிதரின் உடலுக்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒன்று ஒரு மனிதர் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் எட்டு டம்ளர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் இளநீர் உடல் வெப்பநிலை சீராக வைக்க உதவுகிறது,

100 மில்லி இளநீரில் 15 kcl உள்ளது ஆனால் இருதய நோய் மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரையும், செயற்கை இனிப்பு பொருட்களும் சேர்க்கப்படுகிறது இதனால் பற்களில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது செயற்கை குளிர்பானங்கள் தண்ணீர் மட்டும் இயற்கை பழச்சாறுகளுக்கு ஈடாகாது அவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

டீ மற்றும் காபியில் புத்துணர்வு ஊட்டக்கூடிய காஃபின் வேதிப்பொருள் உருவாகிறது இவை மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது 150 மில்லி காபி 80 முதல் 85 கிராம் காஃபின் வேதிப்பொருள் உள்ளது, இன்ஸ்டன்ட் காபியில் 50 முதல் 65 மில்லி கிராம் காஃபின், டி யில 30 முதல் 65 கிராம் காஃபின் உள்ளது ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளில் 300 மில்லி கிராம் காஃபின் உடலில் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் டீ மற்றும் காபி குடிப்பதால் உடலுக்கு செல்லும் இரும்பு சத்துக்களை தடைப்படக்கூடும் உணவருந்துவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவும் பின் பாகமும் டீ மற்றும் காபி குடிப்பது தவிர்க்க வேண்டும் காஃபின் தவிர, தேயிலை (பச்சை அல்லது கருப்பு) தியோப்ரோமைன் மற்றும் தியோபிலின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது அவை தமனிகளைத் தளர்த்தவும், அதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கின்றது. காபியை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதயத் துடிப்பில் அசாதாரணங்களை ஏற்படுத்தும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது...

Tags

Next Story