வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு ரெட் அலர்ட்!!

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு ரெட் அலர்ட்!!

rain

சென்னைக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. நாளைய தினம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகருவதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்து வரும் 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும். குறிப்பாக காலை நேரத்தில் அதிக கனமழையை எதிர்பார்க்கலாம். முக்கியமாக சென்னைக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Tags

Next Story