அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் : மு.க. ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியமான ஜனநாயக நாடுகள். இரு நாடுகள் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக தொடர்கிறது.கேல்லப் நிறுவன கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது என்றும் தெரிவித்தார்.
Next Story