மேட்டூர் அணை நீர்வரத்து 10,514 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்வரத்து 10,514 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணை

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமனையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 6,498 கன அடியாக இருந்த நிலையில்,மாலை 7,563 கன அடியாகவும் இன்று காலை 10,516 கன அடியாகவும் அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 54.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 55.82 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 21. 67 டி.எம்.சி,யாக உள்ளது.

Tags

Next Story