தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட தகவல் - கட்டணத்தை குறைவாக மாற்றி அமைத்த அதிகாரிகள் !!!

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட தகவல் - கட்டணத்தை குறைவாக மாற்றி அமைத்த அதிகாரிகள் !!!

மின்சார வாரியம் 

மின்கம்பிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் புதிய மின் இணைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக மின்சார வாரியத்திற்கு தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை அடுத்த புதிய மின்சார இணைப்புகளுக்கான மேம்பாட்டு கட்டண உயர்வினை மாற்றி அமைத்த தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை போன்ற பெரு நகரங்களில் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிராமங்களில் மற்றும் சிறு மற்றும் ஓரளவு பெரிய நகரங்களில் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கம்பிகள் மற்றும் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் உயர்த்தப்பட்ட மின்கம்பிகள் மூலம் மும்முனை இணைப்பும் மூலம் விநியோகம் செய்யப்படும் மேம்பாட்டு கட்டணமாக ரூபாய் 2000 மற்றும் ஒருமுறை இணைப்புக்கு ரூபாய் 2, 800 வசூலிக்கிறது. அதே நேரம் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்யப்பட்டால் ஒருமுனை இணைப்புக்கு ரூபாய் 7000 மற்றும் மும்முனை இணைப்புக்கு ரூபாய் 5000 மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கிறது.

ஆனால் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்யப்படாத பகுதிகளிலும் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மின் நுகர்வோர்கள் தொடர்ந்து மின்வாரியத்திடம் கவலையை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையம் வலியுறுத்தியது. இதை அடுத்து 75 சதவீதத்திற்கும் அதிகமான பூமிக்கு அடியில் கேபிள்களை கொண்ட மின்சார விநியோகம் நெட்வொர்க்களில் அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

அதே நேரம் பூமிக்கு அடி நெட்வொர்க் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் மின்சார இணைப்பு களுக்கான மேம்பாட்டு கட்டணத்தை மாற்றி அமைத்து மேம்பாட்டு கட்டணம் இனி அதிகமாக இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story