புதுமைப் பெண் திட்டம் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

புதுமைப் பெண் திட்டம் நீட்டிப்பு:  அரசாணை வெளியீடு

புதுமை பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு. இதன் மூலம் 49,664 மாணவிகள் பயன்பெறுவர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் மூலம் 2.73 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படுவதாக கடந்த பட்ஜெட் கூட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவி வரும் பள்ளிகளில் பயிலும் 49,664 மாணவிகள் கூடுதலாக பயனடையவுள்ளனர்.

இதற்காக 2024-25 நிதியாண்டில் ரூ 35.37 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 370 கோடி ரூபாய் நிதி வரும் நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story