சிதம்பரம் தொகுதியில் வாக்குஎண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

சிதம்பரம் தொகுதியில் வாக்குஎண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம்

சிதம்பரம் தொகுதியில் வாக்குஎண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும்,

ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறைகள், வாக்கு எண்ணும் அறைகள்,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வதற்கான பாதைகள், வேட்பாளர் முகவர்கள் வந்து செல்லும் பாதைகள், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் முகவர்களுக்கான இட வசதிகள், தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களையும்,

பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் பார்வையிட்டு, வரைபடங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) திருவருள்,

உதவி செயற் பொறியாளர்கள் தனவேல், ஜெயந்தி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலிலூர்ரகுமான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story