பள்ளி மாணவர்களுக்கு சீருடை அளவெடுத்து தைக்க அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு சீருடை அளவெடுத்து தைக்க அறிவுறுத்தல்

சீருடை

பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகள் அளவெடுத்து தைப்பதற்கு தேவையான துணியின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள deeksections@gmail.com மின்னஞ்சலுக்கு தலைமை ஆசிரியர்கள் பெற்று அனுப்ப மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடைகள் தைத்து வழங்குவதை பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கான சீருடைகளை தைப்பதற்கு பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள், சுய உதவிக் குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதி வாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட தையல் கலைஞரின் உதவியுடன் தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளில் என மாணவர்களின் அளவுகளை மேற்கொண்டு பள்ளி மேலாண்மை குழு வாயிலாக மாணவ மாணவியருக்கு அளவெடுத்து தைப்பதற்கு தேவையான துணியின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள deeksections@gmail.com மின்னஞ்சலுக்கு தலைமை ஆசிரியர்கள் பெற்று அனுப்ப மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story