வெள்ள பாதிப்பு பகுதிகளில் துப்புரவு பணி தீவிரம்
தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்
தூத்துக்குடி மாநகராட்சியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேலம்,கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் பல்வேறு நகராட்சிகளின் பணியாளர்கள் துப்புரவு செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் தேங்கியுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குறிஞ்சி நகர் ,தனசிங் நகர், முத்தம்மாள் காலனி ,வி எம் எஸ் நகர், அம்பேத்கார் நகர், ராஜூ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை நீர் குறைந்த பகுதிகளில் சேலம் கோவை திருச்சி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநகராட்சி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள கழிவு பொருட்களை சேகரித்து லாரி மூலம் ஏற்றி தருவை குளம் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்கின்றனர்.
Next Story