புனித மேரீஸ் கிறிஸ்தவக் கல்லறையில் தீவிரத் தூய்மைப் பணி
பெருநகர சென்னை மாநகராட்சி புனித மேரீஸ் கிறிஸ்தவக் கல்லறையில் குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணியினைப் மாநகராட்சி ஆணையர் ஆய்வு.
சென்னை சைதாபேட்டையில் கூடுதல் தலைமைச் செயலாளரும் மாநகராட்சி ஆணையாளருமான இராதாகிருஷ்ணன் இன்று (20.01.2024) கிறிஸ்தவக் கல்லறையில் நடைபெற்ற தூய்மைப் பணிகளை ஆய்வு மேற்க்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-124, புனித மேரீஸ் கிறிஸ்தவக் கல்லறையில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் விமலா, மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story