ஜிஎஸ்டி வரி விதித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்த பிறப்பித்த நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 6 கோடியே 97 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி. வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி கூடுதல் இயக்குனர் பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்ட இந்த கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியாக 6 கோடியே 97 லட்சத்து 19 ஆயிரத்து 360 ரூபாயை செலுத்தும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குனர், மே 6 ம்தேதி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸை ரத்து செய்ய கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குனருக்கும், கூடுதல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஜூலை 1 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Next Story