அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி.. மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் !

அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி.. மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் !

இணையதள வசதி

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 6,223 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3,267 நடுநிலை பள்ளிகள், 8,711 தொடக்கப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இணையதள வசதி வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அரசுப் பள்ளிகளில் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story