வாகன புகை பரிசோதனைக்கு புதிய செயலி அறிமுகம்!

வாகன புகை பரிசோதனைக்கு புதிய செயலி அறிமுகம்!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாகன புகை பரிசோதனை செயலியை வாகன பரிசோதனை மையங்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாகன புகை பரிசோதனை செயலியை வாகன பரிசோதனை மையங்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் 5 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இதன் செயல்பாட்டினை மேம்படுத்த தொழில்நுட்பம் பொருந்திய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.யு.சி.சி.2.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ஜி.பி.எஸ். வசதி கொண்டுள்ளது.

இதன்மூலம் வாகனப்பரிசோதனை செய்யும் போது வாகன பதிவெண் மற்றும் புகை பரிசோதனை மையத்தின் பெயர் தெரியும் வகையில் 2 புகைப்படங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாகனத்தை சோதனையிடுவது போன்ற வீடியோ பதிவும் பதிவேற்றம் செய்யப்படும். இவை இல்லாமல் புகை பரிசோதனை சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யவோ அல்லது நகல் எடுக்கவோ முடியாது. ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளதால் வாகனங்களை கொண்டு வந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும். இதனை நாளை மறுநாள் முதல் அனைத்து வாகனப்பரிசோதனை மையங்களும் நிறுவி செயல்படுத்த வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story