கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல் : பீதியடைந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல் : பீதியடைந்த சுற்றுலா பயணிகள்

உள்வாங்கிய கடல் 

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். வழக்கம்போல இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண தீபாவளி பண்டிகை காரணமாக குறைவான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகளும் மணல் பரப்புகளும் வெளியே தெரிந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போடுவதற்கு அச்சம் அடைந்தனர். அதையும் மீறி கடலில் இறங்கிய சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

Tags

Next Story