நவம்பர்-டிசம்பரில் ஐபிஎல் ஏலம்

நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் வீரர்களின் எண்ணிக்கை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஆக்ஷன் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அணியில் தக்கவைக்கபடும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மெகா ஆக்ஷனில் அணியின் முக்கிய வீரர்களை தவிர, மீதமுள்ள வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். எனவே இதுவரை இருந்ததை தாண்டி, அணிகள் தக்கவைக்க விருப்பப்படும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த வாரம் 16 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 10 அணிகளுக்கான சிறப்பு கூட்டத்தில், அந்தந்த அணிகளின் உரிமையாளர்களிடம் ஐபிஎல் நிர்வாகம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதிகபட்சம் ஒரு அணியில் 8 வீரர்கள் வரை தக்கவைக்க விதி கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story