டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பைல் படம் 

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 2021 - 23 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, ரூ. 1,182 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் மனு அளித்தது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Tags

Next Story