ஈஷா யோகா மைய வழக்கு - விரைந்து விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவு
தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்த விவசாயி திருமலை என்பவர் தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்ததாகவும், கடந்த ஆண்டு ஈஷா யோகா மையத்தில் இருந்து தொலைப்பேசியில் அழைத்து , கணேசன் 3 நாட்களாக ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என தெரிவித்ததாக மனு அளித்தார்.
காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரரை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி செய்த மனு தாக்கல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், 6 பேர் காணாமல் போய் உள்ளனர். விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் பதில் அளித்தார்.
காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும், உரிய பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு அளித்து வழக்கை அடுத்த மாதம் 8 ம்தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.