முதல்வரை சந்தித்த இஸ்லாமிய சமூக மக்கள்
முதல்வர்
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.6.2024) , தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் எம். முஹம்மது பஷீர், செயலாளர் எஸ். முஹம்மது பெய்க், பொருளாளர் எஸ்.ஏ. லியாகத் அலி, துணை செயலாளர் எம். ஆரிப் சுல்தான் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏ. காசிம் முஸ்தபா, ஆர். முஹம்மது பாரூக், யு. ஹனீபா ஆகியோர் சந்தித்து, இஸ்லாமிய சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் உள்ளார்.
Next Story