அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு குடியிருப்பு ஆணை வழங்கல்

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு குடியிருப்பு ஆணை வழங்கல்

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

மக்களுடன் முதல்வர் பயனாளிகள் நலத்திட்டம் வழங்குதல் அடுக்குமாடி குடியிருப்பு அரசியலுக்கு குடியிருப்பு ஆணை வழங்கபட்டது.

திருச்செங்கோடு நகராட்சியில் கடந்த மாதம் மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மணிக்களின் அடிப்படையில் 45 பயனாளிகளுக்கு 2 கோடியே 39 லட்சத்து 16 ஆயிரத்து 152 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் தலைமை தாங்கினார், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன்,

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்டக்குழு உறுப்பினருமான மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருச்செங்கோடு வட்டம் வரகுராம் பட்டி கிராமத்தில் பட்டேல் நகர் என பெயரிடப்பட்டுள்ள 848 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட பகுதியில் பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டிய ரூ.ஒரு லட்சத்து 49,100தொகையை முழுவதுமாக செலுத்திய121 பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணை வழங்கும் விழா ஆகியவற்றிலும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடியிருப்பிற்கான ஒதுக்கீடு ஆணை வழங்கினார்கள்,

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் பஞ்சாயத்து தலைவர் மணி ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் பஞ்சாயத்து துணை தலைவர் மனிஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story