வாலாஜாபேட்டையில் வாக்குகளை சேகரித்த ஜெகத்ரட்சகன்!
வாக்குகளை சேகரித்த ஜெகத்ரட்சகன்
ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்குகளை சேகரித்தார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் ஜெகத்ரட்சகன் வாக்குகளை சேகரித்தார்.
Next Story