தபால் நிலைய வைப்பு நிதி முறைகேடு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை
பைல் படம்
தபால் நிலையத்தில் வைப்பு நிதி 38 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் தபால் நிலைய பெண் உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு தபால் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றிய தனலட்சுமி என்பவர் வைப்பு நிதியில், 38 லட்சத்து 81 ஆயிரத்து 450 ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
முறைகேடு செய்த பணத்தை திரும்ப செலுத்தி விட்டதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தனலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பணத்தை முறைகேடு செய்ததால் கருணை காட்ட முடியாது என்று சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி மலர்வாலண்டினா தெரிவித்தார். தனலட்சுமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார் நீதிபதி மலர்வாலண்டினா.