அலங்காநல்லூர் அருகே கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு… அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைப்பு!!

Jallikattu
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி ஜல்லிக்கட்டு சுரேஷ் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை, வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதை அடுத்து தகுதியான ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 721 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் பரிசு பொருட்களாக குக்கர், கட்டில், பீரோ, சைக்கிள், எல்.இ.டி டிவி, சேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. மேலும் இதில் 28 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சண்முக வடிவேல், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநில தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் சூரியூர் ராஜா, மதுரை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சேது.காமேஸ்வரன், தமிழ்நாடு மீனவர் பேரவை ஆலோசனை குழு தலைவர் அய்யர்பங்களா லால், திருச்சி மாவட்ட தலைவர் ஓலையூர் மூக்கன், பொருளாளர் நவல்பட்டு மோகன், மாநில துணை தலைவர் சாலை சக்கரபாணி , தின்டுக்கல் மாவட்ட தலைவர் சின்னையன், மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிர்வாகிகள், மற்றும் அரசு வருவாய்துறை அதிகாரிகள், மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங், மற்றும் நுப்பூர் கப்பூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இதில் சுமாட் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.