பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு மாடுகள் ஊர்வலம்
எருமப்பட்டி ஜனவரி 18 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பண்டிகை ஒட்டி விவசாய கால்நடைகள் மற்றும் பசு மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் முக்கிய திருவிழாவை கொண்டாடப்படும் விழாவில் பொங்கல் வைத்து மாட்டிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று எருமப்பட்டி பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் பசு மாடுகளை விவசாயிகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் எருமப்பட்டி பெரிய கோவிலில் இருந்து பழனி நகர் கடைவீதி வழியாக அக்னி மாரியம்மன் கோவில் வரை அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு அக்னி மாரியம்மன் எனக்கு சிறப்பு பூஜை செய்தவுடன் மாடுகளுக்கும் தீபார்த்தனை காட்டப்பட்டன.
இதை தொடர்ந்து துறையூர் மெயின் ரோடு வழியாக அழைத்து வந்து மகா மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று அங்கும் சிறப்பு தீபாராதனை செய்தனர். இதில் ஏராளமான ஜல்லிக்கட்டு மாடுகள் கலந்து கொண்டன இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்தனர்.