மல்லிகைப்பூ கிடுகிடுன்னு உயர்வு - கிலோ ரூ.3300க்கு விற்பனை

மல்லிகைப்பூ கிடுகிடுன்னு உயர்வு - கிலோ ரூ.3300க்கு விற்பனை

மல்லிகை பூ 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது மல்லிகை பூ,பிச்சிப்பூ, கனகாம்பரம், சாமந்தி, முல்லை போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ மல்லிகை பூ 800 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. நாளை சுப முகூர்த்த தினம் இருப்பதால் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் மல்லிகை பூ விளைச்சல் குறைவாக உள்ளதால் மல்லிகை பூவின் விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.3300க்கு விற்பனையானது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story