ஜெ. இந்து தலைவரா? அண்ணாமலைக்கு கடும் கண்டனம் !

ஜெ. இந்து தலைவரா? அண்ணாமலைக்கு கடும் கண்டனம் !

 ஜெயக்குமார்

ஜெயலலிதாவை இந்து தலைவர் என குறிப்பிட்ட அண்ணாமலைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா ஒரு சிறந்த இத்துத்துவா தலைவர். அவர் விட்டுச் சென்ற இடத்தை பாஜக நிரப்பி வருகின்றது என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, "அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராகத் தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிமுக முன்னால் ஜெயக்குமார், ஜெயலலிதாவை இந்து தலைவர் என குறிப்பிட்ட அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், " ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராக இருந்த ஜெயலலிதா அவர்களை ஒற்றை மத தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்கு கடும் கண்டனம்.'' தெரிவித்துள்ளார்.

Tags

Next Story