மதத்தை மிஞ்சிய மனிதநேயம் ; கும்பாபிஷேக விழாவில் பாதிரியார்கள் ; வரவேற்ற மக்கள்

மதத்தை மிஞ்சிய மனிதநேயம் ; கும்பாபிஷேக விழாவில் பாதிரியார்கள் ; வரவேற்ற மக்கள்

 கும்பாபிஷேக விழாவில் கிறிஸ்துவ பாதிரியார்கள்

ஜெயங்கொண்டம் அருகே இந்து கோவில் கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தின் உச்சி வரை சென்று இந்து மக்களோடு மக்களாக இணைந்து, கும்பாபிஷேக விழாவை முன்னின்று நடத்திய கிறிஸ்தவ பாதிரியார்களின் மனிதநேய சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம் என்ற பொன்மொழிக்கு ஏற்றவாறு, நம் இந்திய திருநாட்டில் மதத்தால் பிரிந்த போதும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம்முடைய பண்பாடாக இருந்து வருகிறது. இதற்கெல்லாம் பறைசாற்றும் வகையில், ஒரு அற்புதமான, நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆம்! அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் இன்னும் அழகான கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் நிறைந்து இந்து கோவில்களும் கிறிஸ்தவ கோவில்களும் நிறைந்து ஆன்மீக பூமியாக இருந்து வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் உடைய இக்கிராமத்தில் விநாயகர் மாரியம்மன், அய்யனார், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் பொதுமக்கள் திட்டமிட்டு, ஒரே நாளில் கும்பாபிஷேக விழாவை நடத்த முன்வந்தனர். இவ்விழாவிற்கு கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் இந்து கிராம மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக விழா வெகு வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கும் அந்த வேலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. ஆம்! இந்துக்களின் அழைப்பினை கருணையுடன் ஏற்ற நடுவலூர் புனித சூசையப்பர் ஆலய பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகிய இருவரும் தங்களுக்கே உரித்த பானியில், பாரம்பரிய உடையோடு கம்பீரமாக நடந்து கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களை பார்த்து அங்கு திரண்டு நின்ற கிராம மக்கள் ஒரு சேர திரண்டு நின்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தங்களது காலணிகளை கழற்றிவிட்டு, புனித நீர் ஊற்றும் அந்த கோவிலின் விமான கலச உச்சிக்கு சென்று இந்துக்களின் புனித்தை மதித்து, மக்களோடு மக்களாக நின்று இரு கரம் கூப்பி வணங்கியதுதான் ஹைலைட். பின்னர் ஆகம விதிப்படி கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் கோவிலுக்கு வந்து சிறப்பித்த 2 பாதிரியார்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. அத்தோடு மட்டுமின்றி அங்கிருந்து இளைஞர்கள், பொதுமக்கள், பாதிரியார்களோடு செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்த காட்சி மதத்தால் பிரிந்த போதிலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வில் மதத்தை மிஞ்சிய மனிதநேயத்தை பறைசாற்றியது என்றால் அது மிகை அல்ல.

Tags

Next Story