100% தேர்ச்சி : பள்ளி தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

100% தேர்ச்சி : பள்ளி தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

அரசு மாதிரி பள்ளி

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு 100% தேர்ச்சி பெற்றனர். இதனால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்தது. கடந்த நான்கு வருடங்களில் 80% இருந்து சிறிது சிறிதாக முன்னேறி தற்போது 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்த நூறு சதவீதம் தேர்ச்சியை ஜெயங்கொண்டத்தில் உள்ள சோழதேசம் நண்பர்கள் ஃபவுண்டேஷன்,மற்றும் பரப்பிரம்மம் பவுண்டேஷன் சார்பில் நேற்று அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோகுல ராஜா தலைமை தாங்கினார். பரபிரம்மம் பவுண்டேஷன் தலைவரும் அன்னை தெரசா பல்லி தாளாளருமான முத்துக்குமார் முன்னிலை வகித்து பேசினார். சோழ தேசம் நண்பர்கள் பவுண்டேஷன் தலைவர் பாலச்சந்தர், செயலாளர் சுந்தர், மற்றும் சுரேஷ்கண்ணன், ஸ்ரீராம் செல்வராஜ், அட்வகேட் ராஜவடிவேல், ரவிரபீக், பாலமுருகன், ராஜசேகர், ஆனந்த், ரவிசீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார், மற்றும் பத்தாம் வகுப்பு பாடம் நடத்தி மாணவர்களை அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறச் செய்த பள்ளி ஆசிரியர் ஆசிரியைகளையும் பாராட்டி சிறப்பு செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story