நாமக்கல் மாவட்ட ராஜ் டிவி செய்தியாளர் மறைவுக்கு பத்திரிகையாளர்கள் மௌன அஞ்சலி
நாமக்கல் மாவட்ட ராஜ் டிவி செய்தியாளர் மறைவுக்கு பத்திரிகையாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்
நாமக்கல் மாவட்ட ராஜ் டிவி செய்தியாளா் மு.வை.முத்தையா மறைவுக்கு அஞ்சலி! நாமக்கல் மாவட்ட மூத்த செய்தியாளர் ராஜ் டிவி நிருபா் வால்பாறை மு.வை.முத்தையா மறைவிற்கு ஊடகடத்துறையினர், அரசியல் கட்சியினர், அரசு துறை அலுவலர்கள், சமூக நல அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ராஜ் டிவியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த செய்தியாளர் வால்பாறை மு.வை.முத்தையா (65) உடல் நலக்குறைவால் கோயமுத்தூர் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாமக்கல் ஆண்டவர் நகர் அரசு குடியிருப்பில் இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட தினசரி நாளிதழ் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் / கேமராமேன்கள் உள்ளிட்ட ஊடகடத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர், அரசு துறை அலுவலர்கள், சமூக நல அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பலா் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக தமிழ்நாடு பத்திரிகையாளா்கள் சங்கம் (TUJ) மற்றும் நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளா்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பஸ்நிலையம் மணிக்கூண்டு அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகடத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர், அரசு துறை அலுவலர்கள், சமூக நல அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Tags
Next Story