கச்சத்தீவு விவகாரம் - ப சிதம்பரம் புதிய தகவல்
ப.சிதம்பரம்
கச்சத்தீவு விவகாரத்தில் ப.சிதம்பரம் புதிய தகவல் பதிவிட்டுள்ளார்.
ப சிதம்பரம் வெளியிட்டுள்ள X தள பதிவில் கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர் அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி் விடாதீர்கள்
Next Story